“திரும்பி வந்துரு மாமா”.. ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் மனமுடைந்து ஆடிய மனைவி பிரியங்கா… கலங்க வைக்கும் வீடியோ…!

By Nanthini on புரட்டாதி 19, 2025

Spread the love

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (46) உடல் நலக்குறைவால் காலமானார். சென்னையில் நேற்று முன்தினம் படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தாலும் சிகிச்சை பலனின்றி  நேற்று இரவு உயிரிழந்தார் .

இவருடைய மரணம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று இரவு முதல் ரோபோ சங்கர் உடலுக்கு திரை பிரபலங்கள் பலரும் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் நடந்து வருகிறது. இறுதி ஊர்வலத்தின் போது மனமுடைந்து ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா மேள தாளத்திற்கு ஆட்டம் ஆடினார். கண் கலங்கியவாறு அவர் தன் கணவரின் இறுதி சடங்கில் ஆட்டம் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

   

 

   

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Galatta Media பதிவைப் பகிர்ந்துள்ளார் (@galattadotcom)