விஜய் டிவியின் சொத்து என சொல்லக்கூடிய அளவுக்கு ரோபோ சங்கர் பல நிகழ்ச்சிகளில் நடுவராகவும் தொகுப்பாளராகவும் இருந்து வருகின்றார். இவர் தமிழ் திரைப்படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய மகள் இந்திரஜா தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இந்திரஜா- கார்த்திக் திருமணத்தில் வட இந்தியாவில் நடப்பது போல சங்கீத், மெஹந்தி, ஹல்தி எனபடு கோலாகலமாக நடைபெற்றது. அம்பானி வீட்டு திருமணம் போல, ரோபோ ஷங்கர் மகள் திருமணம் நடந்தது என்று சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்யும் அளவிற்கு இவர்களின் திருமணம் தடபுடலாக நடந்தது.

திருமணத்திற்கு பிறகு இந்திரஜா- கார்த்திக் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கி கலக்கிக் கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில் தான் கர்ப்பமாக இருப்பதாக இந்திரஜா அறிவித்திருந்தார். சமீபத்தில் வளைகாப்பும் வெகுவிமரிசையாக நடந்தது.

இந்நிலையில் இந்திராஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில்பதிவிட்டுள்ளார்கள் . இதனையடுத்து ரோபோ ஷங்கர் தாத்தாவாகிவிட்டதாக அவருக்கு வாழ்த்துக்களை குவிந்து வருகிறது.
