விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில் நிகழ்ச்சி தற்போது முடிவடைந்து விட்டது. டைட்டில் வின்னராக முத்து குமரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மற்ற சீசன்களில் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் ஒரு சில வாரங்களிலேயே முத்துக்குமரன் தான் டைட்டில் வின்னர் என்பது தெரிந்து விட்டது.

தீபக் மற்றும் மஞ்சரி எலிமினேஷன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்தது. இதையெல்லாம் தாண்டி நிகழ்ச்சியின் சுவாரசியம் என்னவென்றால் புது தொகுப்பாளர் விஜய் சேதுபதி தான். இதற்கு முன்பாக கமலஹாசன் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வந்தார். அப்போது கமலஹாசன் நேர்மறை மற்றும் எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்று வந்தார்.

மற்ற சீசன்களை ஒப்பீடுகையில் இந்த சீசனில் சண்டை எல்லாமே கம்மிதான் என்று சொல்லலாம். எல்லோரும் தங்களை நல்லவர்களாக காட்டி கொள்வதற்கு ரொம்பவே பாடுபட்டார்கள். பணபெட்டியை எடுக்கப்போன ஜாக்குலின் குறிப்பிட்ட நேரத்தில் பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் வராததால் எலிமினேட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஜாக்குலின் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில்,”எனக்கு சப்போர்ட் பண்ணுன மக்களுக்கு நன்றி. யாருன்னே தெரியாதவங்க கூட எனக்காக அழுத்திருக்கீங்க. உங்களோட அன்பை பத்திரமாக வச்சிருப்பேன். கண்டிப்பாக finale முடிச்சிட்டு உங்க எல்லார்கிட்டயும் நான் பேசுறேன்” என்று பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
