தமிழ் திரையுலகை தற்போது அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள செய்தி தான் நடிகர் ரோபோ சங்கரின் திடீர் மரணம்.. உடல் நலக்குறைவால் கடந்த சில வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கர் உடல் எடை மெலிந்து காணப்பட்டார். பிறகு அதிலிருந்து மீண்டும் உடல் நலம் தேறி டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட விழாக்களுக்கு பழைய உற்சாகத்தோடு வந்த அவர் பிஸியாக படங்களில் நடிக்க தொடங்கினார். நேற்று முன்தினம் படப்பிடிப்பில் பங்கேற்ற அவர் திடீரென மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கர் நேற்று இரவு 8.30 மணி அளவில் காலமானார்.

நடிகராக பல வெற்றி படங்கள் கொடுத்திருந்தாலும் கூட ரோபோ சங்கரின் ஆரம்பகாலம் என்பது டிவி நிகழ்ச்சி என்று பலர் அறிந்திருக்க கூடும். ஆனால் ரோபோ சங்கரின் தொடக்கம் என்பதை மிஸ்டர் சென்னையில் இருந்து தான் தொடங்கியது. ரோபோ சங்கரின் வாழ்வில் ஆணழகன் போட்டி ஒரு முக்கிய திறப்பு முனையாகும். இளமை காலத்தில் மதுரையில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் பங்கேற்ற மிஸ்டர் மதுரை மற்றும் மிஸ்டர் தமிழ்நாடு ஆகிய பட்டங்களை பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அவருடைய அந்த உடல் வலிமையும் கட்டு மஸ்தான தோற்றமுமே பின்னாலில் அவருக்கு ரோபோ சங்கர் என்ற பிரபலமான பெயரை பெற்று தந்தது. பிறகு தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சியில் மிமிக்கிரி கலைஞராக தொடங்கிய இவ்வாறு தன்னுடைய அசத்தலான முகபாவனைகள் மற்றும் குரல் கலாட்டாக்கள் மூலமாக பிரபலமானார் அதன் பிறகு வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், வேலைக்காரன் மற்றும் ஹீரோ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் நோய் போன்ற பிரச்சனைகளால் சிரமப்பட்ட இவர் பல மாதங்கள் திரையிலிருந்து காணாமல் போனார். மீண்டும் ஆரோக்கியம் பெற கடுமையாக முயற்சி எடுத்து வந்த நிலையில் பூரண உடல் நலத்தோடு தான் இருப்பதை உணர்த்தும் விதமாக தொடங்கிய இடத்திலிருந்து கடந்த 2023 ஆம் ஆண்டு 25 ஆண்டுகள் கழித்து மதுரையில் நடந்த 37 ஆம் ஆண்டு ஆணழகன் போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தன்னுடைய பழைய வலிமையை நினைவூட்டும் வகையில் உடல் பாவனைகளை செய்து காட்டினார்.

அந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் தந்தது. தற்போது அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வருத்தத்தோடு பகிர்ந்து வருகிறார்கள். இளமை காலத்தில் ஆணழகலாக திகழ்ந்து பிறகு நகைச்சுவை நடிகராக ஆயிரக்கணக்கான ரசிகர்களை மகிழ வைத்த ரோபோ சங்கரின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ஃபைனர்களுக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனங்களுக்கும் பெரிய துயரமாக அமைந்துள்ளது.
