பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (46) உடல் நலக்குறைவால் காலமானார். சென்னையில் நேற்று முன்தினம் படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தாலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார் =.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட மீண்டும் வந்த இவர் நலம் பெற வேண்டுமென்று ரசிகர்கள் பலரும் வேண்டி வந்த நிலையில் தற்போது இவருடைய திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இவருடைய மறைவுக்கு தமிழ் திரையுலக சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேடைகளில் தொடங்கி சின்னத்திரை, வண்ணத்திரை என தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர். அவருடையம் மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.
