சமீபகாலமாகவே ஏராளாமான திரையுலக பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகிறார்கள். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 2 நாட்களுக்கு முன்பாக நடிகர் ரோபோ ஷங்கர் உயிரிழந்தார். ஸ்டாண்ட் அப் காமெடி இன் என மேடை நிகழ்ச்சிகள் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கிய ரோபோ சங்கர் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயத்தை கவர்ந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கிய சங்கர், தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக உயர்ந்தார்.
View this post on Instagram
அன்றாட பிசியான வாழ்க்கையில் சிரிப்பு மறந்த மக்களை தன்னுடைய காமெடி மூலமாக மகிழ வைத்தவர். இப்படி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதை கவர்ந்த இவருக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டதால் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகினார். சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் திரையுலகில் நடிக்க தொடங்கியிருந்த போதும் உடல் நல குறைவு மோசம் அடைந்து உயிரிழந்தார். இவருடைய அவருடைய குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகிற்குமே பெரிய இழப்பு என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில் விஜய் டிவியில் என்றும் நம் நினைவில் ரோபோ ஷங்கர் என்ற நிகழ்ச்சியானது நாளை நடக்கவுள்ளது. இதில் ரோபோசங்கர் குடும்பத்தினர் கலந்து கொள்கிறார்கள். இது குறித்த புரோமோ வீடியோ ஒன்று இனியத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்க்கும்போது நம் கண்கள் குளமாகின்றன.
