திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் வெங்கானூரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற கே எஸ் ஆர் டி சி அதிகாரி சதீஷ் என்பவருடைய மகளும், மருத்துவக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு நர்சிங் பயிலும் மாணவிமான எஸ்.எல்.வ்ரிந்தா திடீரென உயிரிழந்துள்ளார். நேற்று இரவு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சாப்பிடும் நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று தாயிடம் கூறியதும் மயங்கி விழுந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர். பிறகு போலீசார் அவருடைய அறையை சோதனை செய்த போது அங்கிருந்து ஒரு மருந்து பாட்டில் கண்டெடுக்கப்பட்டது. அந்த மருந்தின் அதீத பயன்பாடு மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிகழ்வு மாணவர்களின் வாழ்வில் மன அழுத்தம் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகள் எவ்வளவு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்த கூடும் என்பதை உணர்த்துகிறது.
