பல லட்சம் மதிப்புள்ள வைரத்தால் ஆன பொருள் வந்திருக்கு.. காஸ்ட்லி கிப்டை பார்த்து வியந்த ரோபோ சங்கர் குடும்பம்..!!

By admin on சித்திரை 5, 2024

Spread the love

பிரபல காமெடி நடிகரான ரொம்ப சங்கர் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார். ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். முதல் படத்திலேயே இவரது நடிப்பு பலரையும் வியக்க வைத்தது. அதன் பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்திலும் இந்திரஜா நடித்தார்.

   

கடந்த ஆண்டு தனது முறை மாமனை திருமணம் செய்யப் போவதாக இந்திரஜா சோசியல் மீடியாவில் அறிவித்தார். கடந்த வாரம் மதுரையில் வைத்து கார்த்திக் இந்திரஜா தம்பதிக்கு திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் பிறகு சென்னையில் வைத்து திருமண வரவேற்பு விழா கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

   

 

கறி விருந்து, திருமண ரிசப்ஷன் என ஒவ்வொரு நிகழ்வுகள் பற்றி தான் இப்போது சோஷியல் மீடியாவில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் திருமணத்திற்கு வந்திருந்த பரிசு பொருட்கள் பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது. அதில் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வந்துள்ளதாம். மேலும் வைரக்கல் பதித்த ரோலக்ஸ் வாட்ச்சும் பரிசாக வந்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மாப்பிள்ளைக்கு ஆண்கள் அணியும் வாட்ச் கல்யாண பெண்ணுக்கு பெண்களுக்கான வாட்ச் என கொடுத்துள்ளனர். கிட்டத்தட்ட அதன் விலை 25 லட்சம் ரூபாய் இருக்குமாம். உலகநாயகன் கமல்ஹாசனும் பிரத்தியேகமான பூக்கள் நிறைந்த பொக்கேவை கொடுத்து மணமக்களை வாழ்த்தி உள்ளார். தங்களுக்கு வந்த பரிசுப் பொருட்கள் பற்றி இந்திரஜா ரசிகர்களிடம் காட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்திய வீடியோவும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.