பையை விடாமல் இறுக்கமாக பிடித்த பெண்…! ரோட்டில் தரதரவென இழுத்து சென்ற கொள்ளையன்…. அடுத்த நொடியே…. வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 6, 2026

Spread the love

பஞ்சாப் மாநிலம் சங்கரூர் மாவட்டத்தில் உள்ள மெஹ்லான் சௌக் பிந்த் மெஹ்லான் பகுதியில், பட்டப்பகலில் துணிச்சலான கொள்ளைச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், ஒரு பெண்ணிடம் இருந்து பையை பறிக்க முயன்றனர். அப்போது அந்த பெண் விடாமல் பையை பிடித்து கொண்டதால் இரு சக்கர வாகனத்தில் தரதரவென இழுத்து சென்றனர். இருப்பினும் அந்த பெண் பையை விடாததால் மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.

இந்தத் துணிகரக் கொள்ளை சம்பவம் முழுவதும் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள உள்ளூர் காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய கொள்ளையர்களைப் பிடிக்கத் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.