“என் மகள் எங்கள விட்டு போயிட்டா…” 7 வயது பேத்தியை பார்க்க சென்ற பாட்டி…. மருமகனின் கொடூர தாக்குதல்…. வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 6, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் தேவநஹள்ளியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றி வரும் கவிதா என்பவரின் மகள் சரண்யா, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குடும்பத் தகராறு காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த மகளின் 7 வயது பெண் குழந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட கவிதா, தனது பேரக் குழந்தையைப் பார்த்துப் பேசுவதற்காக எலஹங்காவில் உள்ள மருமகன் மஞ்சுநாத்தின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அங்கு குழந்தையைப் பார்க்க விடாமல் தடுத்த மஞ்சுநாத், கவிதாவிடம் தகராறில் ஈடுபட்டு அவரைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ஆசிரியை கவிதா மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து எலஹங்கா போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.