தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான கங்குவா திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் போனது. இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து முடித்த நடிகர் சூர்யா தற்போது தன்னுடைய 45 ஆவது படத்தில் நடித்து வருகின்றார். ஆர் ஜே பாலாஜி படத்தை இயக்கும் நிலையில் கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடத்தப்பட்டு அதே பகுதியில் படப்பிடிப்பும் தொடங்கியது.
சூர்யா 45 படத்தின் இசை அமைப்பாளர் இளசுகளின் நியூ சென்சேஷன் சாய் அபயங்கர் தான். கட்சி சேர பாடல் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான இவர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் லாரன்ஸ் நடிக்கும் LCU படமான பென்ஸ் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகியுள்ள நிலையில் அடுத்து சூர்யா படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்திற்கு ஆர் ஜே பாலாஜி வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஆர்ஜே பாலாஜி என்றாலே அவர் காமெடி நடிகராக பின்னி பெடல் எடுப்பது வேடிக்கையாக கேப்பே இல்லாமல் நிறைய விஷயங்களை சிரித்துக்கொண்டே பேசுவது என அவருடைய எந்த பக்கத்தை பார்த்தாலும் ஜாலியான ஒருவர் என்பது தான் நம்முடைய நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட ஒருவர் தற்போது வில்லனாக நடிக்க போகிறார் என்பது நம்ப முடியவில்லை. இந்த இந்த படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, யோகி பாபு ,நடராஜன் , சுவாசிகா உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சூர்யா 45 படத்தின் வில்லன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்கும் ஆர் ஜே பாலாஜி தற்போது இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் வழக்கறிஞராக சூர்யா நடிக்க உள்ள சூழலில் அவரை எதிர்த்து வாதாடும் வக்கீலாக ஆர்.ஜே பாலாஜி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.