ஒளிபரப்பாவதற்கு முன்பே புதிய சீரியலில் இருந்து விலகிய ரவீனா தாஹா.. திடீர் முடிவுக்கு என்ன காரணம்..?

By Nanthini on தை 5, 2025

Spread the love

ரவீனா தாஹா விஷ்ணு விஷால் நடிப்பில் ரிலீசான ராட்சசன் திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக ரவீனா நடித்துள்ளார்.விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌனராகம் சீரியலில் ரவீனா நடித்தார். அந்த சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் ரவீனா பிரபலமானார். ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் ரவீனா போட்டியாளராக பங்கேற்றார்.

மௌனம் ராகம் சீரியல் கதாநாயகியா இது! செம மாடர்ன் உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் இணையத்தில் ட்ரெண்டிங் போட்டோ - சினிஉலகம்

   

பூவே பூச்சூடவா சீரியலில் துர்கா கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு கதை சொல்ல போகிறோம் திரைப்படத்தில் நடித்தார். இந்த நிலையில் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் உடன் இணைந்து ஒரு படத்தில் முன்னணி நடிகையாக நடிக்க உள்ளார். கடந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரவீனா போட்டியாளராக பங்கேற்றார்.

   

Raveena Daha shares about her Bigg Boss Season 7 experience in a heartfelt note! - Viral - News - IndiaGlitz.com

 
இந்த நிலையில் விஜய் டிவி பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களுக்கு எண்டு கார்டு போட்டுவிட்டு புதிய செயல்களை களம் இறக்க உள்ளது. அதன்படி விஜய் டிவியில் புதிதாக சிந்து பைரவி என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாகவும் அதற்கான ப்ரோமோவும் சமீபத்தில் வெளியானது. இந்த புதிய தொடரில் ரவீனா தாஹா நடிக்க கமிட்டாகி இருந்தார். அது தொடர்பான போஸ்டர்கள் கூட வெளியாகி இருந்தது. இவருடைய கதாபாத்திரம் இடம் பெறும் ப்ரோமோவும் வெளியாகிறது. இந்த நிலையில் ஒளிபரப்பை ஆகாத இந்த தொடரில் இருந்து ரவீனா விலகியுள்ளாராம். ஆனால் அதற்கான காரணம் என்ன என்று தெளிவாக தெரியவில்லை. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.