“எனக்கு ரெண்டு வாட்டி கல்யாணம் ஆயிடுச்சு, நான் பண்ணது பெரிய தப்பு தான்”.. முதன் முறையாக பர்சனல் லைஃப் குறித்து ஓப்பனாக பேசிய RJ பாலாஜி..

By Sumathi

Updated on:

படபட வென வேகமாக பேசுபவர்களுக்கு என ஒரு போட்டி வைத்தால், அதில் கண்டிப்பாக நடிகர் ஆர்ஜே பாலாஜி வெற்றி பெற்றுவிடுவார். அந்த அளவுக்கு மிக வேகமாகவும், அடுத்தடுத்து பஞ்ச் டயலாக் ஆகவும், அதே வேளையில் காமெடியாகவும் பேசக்கூடியவர்.

எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசஷேம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வெற்றியும் பெற்றிருக்கிறார். நாளை ( 25ம் தேதி) அவர் ஹீரோவாக நடித்த சிங்கப்பூர் சலூன் என்ற புதிய திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்துக்கான பிரமோ நிகழ்ச்சிகளில் ஆர்ஜே பாலாஜி தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

   

 

இயக்குநர் கோகுல் இயக்கிய சிங்கப்பூர் சலூன் படத்தை வேல்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர் தற்போது கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். சத்யராஜ், தலைவாசல் விஜய், லால் உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் கேமியோ ரோலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஜீவா ஆகியோரும் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குறித்த ஒரு பிரமோ நிகழ்ச்சியில் ஆர்ஜே பாலாஜி கூறியதாவது, எனக்கு உண்மையில் எனக்கு ரெண்டு வாட்டி கல்யாணம் ஆச்சு. அதுவும் நான் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நான் பண்ணின பெரிய தப்பு அதுதான். அப்போ எனக்கு 21 வயசு. அதனால வீட்டுல எல்லோரும் ரொம்ப வருத்தப்பட்டாங்க. அப்புறம் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதுவும் அவங்களையே தான்.

ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டதால், வீட்ல நல்ல நாள் எல்லாம் பார்க்க மாட்டீங்களான்னு திட்டி, மறுபடி பத்து நாள் கழிச்சு ஒரு நல்ல நாளா பார்த்து மறுபடியும் என்னுடைய அதே மனைவிக்கு ரெண்டாவது முறையாக கழுத்துல தாலி கட்டினேன். அவங்கதான் இப்போதும் என் மனைவி. எங்களுக்கு கல்யாணமாகி 17 வருஷம் ஆகுது, என காமெடியாக பேசியிருக்கிறார் நடிகர் ஆர்ஜே பாலாஜி.

author avatar
Sumathi