ரஜினிக்கு இப்படி ஒரு நிலைமையா…? சுந்தர்.சி பாணியை பின்பற்றும் ஆர்.ஜி பாலாஜி…!! இதுக்கு ஒரு எண்டே இல்லையா…?

By Devi Ramu on கார்த்திகை 23, 2025

Spread the love

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த படத்திலிருந்து, அவர் சொன்ன கதை ரஜினிக்குப் பிடிக்காத காரணத்தால், இயக்குநர் சுந்தர்.சி விலகியதும் கதைப் பிரச்சினை காரணமாகத்தான் என்று கூறப்பட்டது. சுந்தர்.சி விலகியதால், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சந்தானத்திற்கு அவர் ஏற்கெனவே கூறிய கதையைத்தான் ரஜினி நிராகரித்தார் என்றும் செய்திகள் வெளியாயின.

தற்போது சுந்தர்.சி, முதலில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கவிருந்த ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திலிருந்து விலகிய ஆர்.ஜே. பாலாஜி, அதே கதையைச் சற்றே மாற்றி, ஆண் தெய்வமாக மாற்றி, ‘கருப்பு’ என்ற தலைப்பில் சூர்யாவை வைத்து இயக்கி வருவதாக கூறப்படுகிறது.

   

இந்தச் சூழலில்தான், ரஜினிகாந்திற்கு அடுத்து கதை சொல்லப்போகும் இயக்குநர்களின் பட்டியலில் ஆர்.ஜே. பாலாஜியின் பெயரும் அடிபடுகிறது. ஆர்.ஜே. பாலாஜி, சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய்க்குச் சொன்ன அதே கதையைத்தான் தற்போது ரஜினிக்குச் சொல்லவிருக்கிறார் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.