சபரிமலை ஐய்யப்பன் கோவில் தங்க திருட்டு…! முக்கிய சாட்சியாக மாறும் நடிகர் ஜெயராம்….? வெளியான தகவல்…!!

By Devi Ramu on கார்த்திகை 23, 2025

Spread the love

கேரள மாநிலத்தின் பிரபலமான சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா திருக்கோயிலுக்குச் சொந்தமான ஆபரணங்களில் இருந்து தங்கம் திருடப்பட்ட நிகழ்வு, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கொள்ளை சம்பவம் குறித்துப் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுப் பலரை ஏற்கனவே கைது செய்துள்ளனர்.

இந்தச் சூழலில், சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கில், பிரபல மலையாள நடிகர் ஜெயராம் ஒரு முக்கியச் சாட்சியாகச் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக, நடிகர் ஜெயராமிடம் விவரங்களைப் பதிவு செய்வதற்காகச் சிறப்புக் குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.