மக்களை தலையில் பேரிடி..! உயரும் மின்சாரக்கட்டணம்…? வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!!

By Soundarya on மாசி 1, 2026

Spread the love

மத்திய அரசு வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய தேசிய மின்சாரக் கொள்கை 2026-ஐ அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய கொள்கையின்படி, மின்சாரக் கட்டணமானது எரிபொருள் விலை, பணவீக்கம் மற்றும் மின் உற்பத்திச் செலவுகளுடன் நேரடியாக இணைக்கப்பட உள்ளது. சர்வதேச சந்தையில் நிலக்கரி மற்றும் எரிவாயு விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, நுகர்வோர் செலுத்தும் மின் கட்டணமும் மாதந்தோறும் மாறுபடும் வகையில் இந்த தானியங்கி விலை நிர்ணய முறை அமைய வாய்ப்புள்ளது.

மின்னோட்ட விநியோக நிறுவனங்களின் நிதி இழப்பைக் குறைத்து, மின் துறையை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தக் கொள்கை அமலுக்கு வந்தால் சாதாரண மற்றும் நடுத்தர வர்க்க நுகர்வோர் மீது கடுமையான நிதிச்சுமை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, மின் கட்டணம் கணிசமாக உயரக்கூடும் என்பதால், இது பொதுமக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.