தங்கம் விலை இன்று வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,040 உயர்ந்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 1,12,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ. 14,050 என்ற புதிய விலையை எட்டியுள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் பொருளாதாரச் சூழல் காரணமாகத் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. திருமண சீசன் தொடங்கி உள்ள நிலையில், இந்தத் திடீர் விலை உயர்வு நகை வாங்குவோருக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாட்களில் விலை இன்னும் உயருமா அல்லது குறையுமா என்ற கவலை முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
