நெஞ்சை பதறவைக்கும் காட்சி..! 4 வயது சிறுவனை தூக்கி தரையில் அடித்து… தந்தையுடன் ஏற்பட்ட மோதலால் ஆட்டோ ஓட்டுநர் செய்த் பயங்கரம்…!!

By Soundarya on சித்திரை 1, 2026

Spread the love

மகாராஷ்டிராவில் ஒரு சிறு தகராறுக்காக 4 வயது சிறுவனை ஆட்டோ ஓட்டுநர் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தீப் பவார் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும், சிறுவனின் தந்தைக்கும் இடையே ஏற்பட்ட சிறிய வாக்குவாதம் பயங்கரமான மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த சந்தீப் பவார், அந்த 4 வயது சிறுவனைத் தூக்கி தரையில் வீசியதோடு மட்டுமல்லாமல், அங்கிருந்த இரும்பு கம்பியில் சிறுவனின் தலையை மோதச் செய்து கொடூரமாகத் தாக்கினார்.

இந்த நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வெளியானது. இதைக் கண்ட பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் கடும் ஆத்திரத்தையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.தற்போது அந்தச் சிறுவன் பலத்த தலைக்காயங்களுடன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) உயிருக்குப் போராடி வருகிறான். புகாரின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநர் சந்தீப் பவாரைக் கைது செய்துள்ள காவல்துறையினர், அவரை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.