அபிஷேக் சர்மாவின் திறமையை ஆரம்பத்திலேயே கண்டறிந்த பாண்டிங், அவர் 17 வயதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக அறிமுகமானபோது அவரது முதல் பந்திலேயே ஒரு சூப்பர் ஸ்டாருக்கான அடையாளத்தைக் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால், 2019 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக அபிஷேக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மாற்ற (Trade) வேண்டாம் என்று டெல்லி நிர்வாகத்திடம் தான் பலமுறை கெஞ்சியதாக மனம் திறந்து கூறியுள்ளார்.
தற்போது ஐசிசி டி20 தரவரிசையில் முன்னணியில் இருக்கும் அபிஷேக் சர்மா, வரும் 2026 டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்களைக் குவித்து ‘தொடர் நாயகன்’ விருதை வெல்லக்கூடிய தகுதி படைத்தவர் என்றும் பாண்டிங் கணித்துள்ளார். டெல்லி அணி அவரை அன்று கைவிட்டது இப்போதும் தனக்கு வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
