சமூக ஊடக மோகத்தால் ஒரு பெண் தனது மாமனாரின் இறுதிச் சடங்கின் போது ரீல்ஸ் (Reels) எடுத்த அதிர்ச்சிகரமான காணொளி இணையத்தில் வைரலாகி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட இந்தக் காணொளி, மனித உணர்வுகளை விட சமூக ஊடகத் தாக்கம் மேலோங்கி இருப்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
View this post on Instagram
வீடியோவின் ஒரு பகுதியில் மாமனார் இறந்த துக்கத்தில் அந்தப் பெண் அழுவது போலவும், அடுத்த சில விநாடிகளிலேயே தனது அலைபேசியை எடுத்து அங்கிருந்த சோகமான சூழலை வீடியோவாகப் பதிவு செய்வதும் பதிவாகியுள்ளது. அங்கிருந்த உறவினர்களையும் தனது வீடியோவில் சேர்த்துக் கொண்ட அந்தப் பெண்ணின் செயல், இணையவாசிகளிடையே “மனிதாபிமானம் எங்கே போனது?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் இத்தகைய செயல்கள் கலாச்சாரச் சீரழிவின் உச்சம் என விமர்சித்துள்ளன.
