ஸ்டாலினுக்கு செக்… கொளத்தூரில் போலி வாக்காளர்கள்?… அடுத்த பரபரப்பை கிளப்பிய எல். முருகன்…!

By Nanthini on ஐப்பசி 28, 2025

Spread the love

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் SIR -க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பீகாரில் நடந்ததைப் போலவே SIR என்ற பெயரில் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் பட்டியல் சமூகத்தினரின் வாக்குரிமையை பறிக்கும் சதியை அனுமதிக்க மாட்டோம் என்று திமுக கூட்டணி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் SIR அவசியமான ஒன்று என எல்.முருகன் தெரிவித்துள்ளார். தோல்வி பயத்திலேயே ஸ்டாலின் இதை எதிர்ப்பதாக விமர்சித்த அவர், முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக சந்தேகம் உள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையால் திமுகவின் முறைகேடுகள் அம்பலமாகும் எனவும் முருகன் தெரிவித்துள்ளார். வருகின்ற நவம்பர் 4 முதல் தமிழகத்தில் SIR பணிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.