நேற்று ரிலீஸான வித் லவ் படம் குறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கூறியதாவது, வித் லவ் படத்தின் கதையில் கதாநாயகனுக்கு பெண் பார்க்கிறார்கள். அவர்கள் இருவரும் சந்தித்து பேசும் போது அவர்களது கடந்த காலம் குறித்து பேசுகிறார்கள். இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். ஆனால் ஆண்டுகள் வித்தியாசம் உள்ளது. இருவருக்கும் அந்த பள்ளியில் ஒரு காதல் இருந்துள்ளது. அதை இருவருமே வெளிப்படுத்தியது இல்லை.
எனவே தங்களது பள்ளிக்காலத்தில் அவர்கள் காதல் வயப்பட்டவர்களை சந்தித்து அவர்களிடம் காதலைச் சொல்ல முடிவெடுக்கிறார்கள். இந்த முடிவை அவர்கள் எடுக்கும்போது இடைவேளை வந்து விடுகிறது. இடைவேளை காட்சியை வித்தியாசமாகவும் அமைத்திருந்தார்கள். இதுவரை பள்ளி காட்சிகளை மாற்றி மாற்றி காட்டிக் கொண்டு இருந்தார்கள். அவையெல்லாம் மேம்போக்கான காட்சிகளாக தான் இருந்தது.
இந்த படத்துக்கு கொஞ்சம் சீரியஸான திரைக்கதை அமைத்திருந்தால் ஆட்டோகிராப் அழகி போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் திரைக்கதையில் படக்குழு அதை கோட்டை விட்டுவிட்டது. படத்தில் ஒரு காட்சி நன்றாக இருக்கிறது என்று நினைத்தால் அடுத்த காட்சி முந்தையக் காட்சியை சீரழிக்கும் வகையில் உள்ளது.
கதாநாயகன் அவர் விரும்பிய பெண்ணுடன் சேர வேண்டும் என்ற எண்ணத்தையோ கதாநாயகி அவர் விரும்பிய ஆணுடன் சேர வேண்டும் என்ற எண்ணத்தையோ அல்லது கதாநாயகனும் கதாநாயகியும் சேர வேண்டும் என்ற எண்ணத்தையோ ஏற்படுத்தவில்லை. கதாநாயகன் அவர் விரும்பிய பெண்ணை சந்திக்கும் காட்சி நன்றாக உள்ளது. கிளைமாக்ஸ்சில் ஒரு காட்சி வைத்திருந்தார்கள். அது கொஞ்சம் கூட ஒர்க் அவுட் ஆகவில்லை என்று ப்ளு சட்டை மாறன் வித் லவ் குறித்து எதிர்மறைான விமர்சனம் கூறியிருப்பது வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…