சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான இட்லி கடை என்ற படத்தில் நடிகர் அருண் விஜய் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து இப்போது கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ரெட்ட தல என்ற படத்தில் இரட்டை வேடங்களில் அருண்விஜய் நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன் சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகை தினமான நேற்று இந்த படம் வெளியானது. முதல் நாளில் இந்த படம் 75 லட்சம் ரூபாய் வசூலித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படம் பார்த்த பலரும் படம் குறித்து பெரிய அளவில் பாராட்டுகளை தெரிவிக்கவில்லை. அதனால் கலவையான விமர்சனங்களை ரெட்ட தல படம் பெற்று ஓடுகிறது.
