தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு ஸ்டாலினுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் கூடுதல் தொகுதி மட்டுமல்லாமல் ஆட்சியில் பங்கு என குரல் எழுப்பி வருகிறது. இது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சிக்கலாகவே உருவெடுத்துள்ளது. இப்படியான நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த், முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். ஆட்சியில் பங்கு என்பது ஒவ்வொரு தொண்டர்களின் கருத்தாக உள்ளது.
மேலிட பொறுப்பாளரும் முதல்வர் ஸ்டாலின் இடம் கோரிக்கை வைத்துள்ளனர். கூடிய விரைவில் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும். திமுக கூட்டணி வலுவாக உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி கூடுதல் இடங்களை கேட்கும் போது கன்னியாகுமரி தொகுதி கிடைத்தால் சந்தோசம் என்று விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். எனவே ஆட்சியில் பங்கு என்பது ஒவ்வொரு தொண்டர்களின் கருத்தாக உள்ளதாக விஜய் வசந்த் தெரிவித்துள்ளது மற்றொரு பரபரப்பை கிளப்பியுள்ளது.
