“தாத்தா எங்கள விடுங்க…” அழுத 3 சிறுமிகள்… ஆபாச வீடியோ காட்டி தொட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர்…. கொந்தளித்த பெற்றோர்… பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 18, 2026

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்தவர் சின்னராஜ் (65). கால்நடை மருத்துவமனையில் பராமரிப்புத் துறை உதவியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே தெருவில் விளையாடும் சிறுமிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுமிகளை ஆளில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று, தனது செல்போனில் ஆபாச வீடியோக்களைக் காட்டியும் கைகளால் தொட்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமிகள் அங்கிருந்து தப்பிச் சென்று பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் அழுதுகொண்டே விபரத்தைக் கூறியுள்ளனர்.

   

இதைக் கேட்டு கொந்தளித்த பெற்றோர் காவல் துறைக்கு அவசர உதவி எண் மூலம் தகவல் தெரிவித்தனர். போலிஸார் வருவதை அறிந்து தலைமறைவான சின்னராஜைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலிஸார் அவரை அதிரடியாகக் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.