கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபல்லி அருகே உள்ள கத்தமவாரப்பள்ளி கிராமத்தில் இயங்கி வரும் ஒயின்ஸ் கடை ஒன்றில், கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி நாகராஜு (42) என்பவர் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்து வந்த ஆதிநாராயணா என்பவர், எதிர்பாராத விதமாகத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நாகராஜுவைச் சரமாரியாகக் குத்தினார்.
கத்திக்குத்தில் படுகாயமடைந்து அதிகளவில் ரத்தம் வெளியேறியதால், நாகராஜு சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய ஆதிநாராயணாவை தனிப்படை அமைத்துத் தேடி வந்த பாகேபல்லி காவல்துறையினர், செப்டம்பர் 14 அன்று சிக்பள்ளாப்பூர் பேருந்து நிலையத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், இரு குடும்பத்தினரும் நண்பர்களாகப் பழகி வந்த நிலையில், தன் மனைவியுடன் நாகராஜுவிற்குத் திருமணத்திற்கு மீறிய கள்ளத்தொடர்பு இருப்பதாக ஆதிநாராயணாவிற்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டை வேறு பகுதிக்கு மாற்றியும் சந்தேகம் தீராத ஆதிநாராயணா, சம்பவத்தன்று நாகராஜுவைப் பின்தொடர்ந்து சென்று “என் பொண்டாட்டி கூட நீ எதுக்கு பேசுற?” என வாக்குவாதம் செய்து கொடூரமாகக் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
