இருமல் மருந்து விற்பனைக்கு தடை… மெடிக்கல் ஷாப்புகளுக்கு மத்திய அரசு போட்ட திடீர் உத்தரவு…!

By Nanthini on ஆடி 11, 2026

Spread the love

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், போதை போன்ற தவறான பயன்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு ஒரு முக்கிய அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, 12%-க்கும் அதிகமான ஆல்கஹால் அளவு கொண்ட இருமல் சிரப்புகள் (Cough Syrups) மற்றும் டிஞ்சர்களை (Tinctures) மருத்துவரின் அதிகாரப்பூர்வ பரிந்துரைச்சீட்டு (Prescription) இல்லாமல் மெடிக்கல் ஷாப்புகளில் விற்கக் கூடாது எனத் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், இத்தகைய மருந்துகள் 30 ML-க்கும் அதிகமான பாட்டில்களில் விற்கப்படும் போது, அவற்றை வாங்குபவர்களின் பெயர், முகவரி போன்ற முழு விவரங்களையும் மருந்தகங்கள் ஒரு தனிப் பதிவேட்டில் (Register) முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மருந்துகளின் தவறான பயன்பாட்டைத் தடுத்து, மக்கள் நலனைக் காக்க எடுக்கப்பட்டுள்ள இந்த விழிப்புணர்வுத் தகவலைப் பொதுமக்களின் நன்மைக்காக அனைவரும் பகிர்ந்துகொள்ளுங்கள்