“TNPSC தேர்வு எழுதுங்க….” ரேஷன் கடை கேட்டு விண்ணப்பித்த வாலிபர்…. கடிதத்தில் வந்த அலட்சியமான பதில்… ஆடிப்போன கிராமம்….!!

By Devi Ramu on ஐப்பசி 17, 2025

Spread the love

சிவகங்கை மாவட்டம் அரசனூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருமாஞ்சோலை பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்கின்றனர். இவர்களுக்கான ரேஷன் கடை செம்பூரில் அமைந்துள்ளது. மக்கள் 3 கிலோமீட்டர் தூரம் கடந்து சென்று ரேஷன் பொருட்களை வாங்க வேண்டிய நிலை உள்ளதால் தங்கள் பகுதிக்கு ரேஷன் கடை வரவேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

திருமாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதி அரசனூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பங்கேற்று தங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைத்து தருமாறு மனு கொடுத்தார். தற்போது வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அவருக்கு பதில் கடிதம் வந்தது. அதில் நீங்கள் என்ன பட்டதாரி என்பதால் டிஎன்பிஎஸ்சி சீருடை பணியாளர் தேர்வாணையம், அரசு தேர்வு வாரியம், எஸ்.எஸ்.சி மூலம் தேர்வு எழுதி பணிக்கு செல்லலாம். அதற்கு இலவச பயிற்சி கொடுக்கிறோம்.

   

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவி தொகை பெறவும் நீங்கள் விண்ணப்பிக்கலாம் என பதில் கடிதம் வந்தது. இதனை பார்த்து மாரிமுத்து அதிர்ச்சி அடைந்தார். ரேஷன் கடை கேட்டு மனு கொடுத்ததற்கு வேலைவாய்ப்பு தொடர்பான பதிலை அனுப்பியது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலட்சியமான பதில் தொடர்பாக மாரிமுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார்.