சபாநாயகர் அறைக்கு விரைந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி…. சிக்கிய 6 பேர்… எடப்பாடியின் அடுத்த கணக்கு…. திடீர் திருப்பம்…..!

By Nanthini on ஐப்பசி 27, 2026

Spread the love

ராஜினாமா செய்த அதிமுகவைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் தொடர்பாக, பேரவைச் சபாநாயகர் J.C.D. பிரபாகரிடம் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூடுதல் ஆவணங்களை நேரில் வழங்கி சமர்ப்பித்துள்ளார். சட்டமன்றத்தில் கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மரகரம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா, ஜெயக்குமார், எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகிய 6 எம்.எல்.ஏ-க்களையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி அதிமுக சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. எனினும், இந்த மனு நிலுவையில் இருந்தபோதே அவர்கள் 6 பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், இவர்களது தகுதி நீக்க மனு மீதும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது.

   

முன்னதாக, 6 எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ராஜினாமாவை ஏற்ற உத்தரவை உறுதிசெய்ததோடு, அவர்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் மீது 2 மாதங்களுக்குள் சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்த நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் சபாநாயகர் தரப்பில் கோரப்பட்ட சில முக்கிய விளக்கங்கள், அதிமுகவின் உட்கட்சி அரசியலமைப்பு விதிகள் மற்றும் கூடுதல் சான்றுகள் அடங்கிய ஆவணங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நேரில் சந்தித்து வழங்கியுள்ளார். நீதிமன்றம் நிர்ணயித்த 2 மாத காலக்கெடுவுக்குள் சபாநாயகர் எடுக்கப்போகும் முடிவு என்ன என்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.