சென்னையில் இரண்டரை வயது பெண் குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. . தற்போது குழந்தை ஆபத்தான நிலையில் ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளது. இதுதொடர்பான புகாரின்பேரில், குழந்தை அடிக்கடி விளையாடும் வீட்டின் உரிமையாளர் மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தையின் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகைய கொடூரச் செயல்கள் சமூகத்தின் பாதுகாப்பற்ற சூழலை வெளிப்படுத்துவதோடு, பிஞ்சுப் பருவக் குழந்தைகளின் பாதுகாப்புக் குறித்த கடுமையான கேள்விகளையும் எழுப்புகின்றன. தவறு இழைத்தவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் தலைகுனிவை ஏற்படுத்துகிறது. குற்றவாளிகளுக்கு சட்டப்படி வழங்கப்படக்கூடிய கடுமையான தண்டனைகள் மட்டுமே இதுபோன்ற வன்கொடுமைகளுக்குத் தடையாக இருக்க முடியும். பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதோடு, குழந்தைகளைப் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
