தமிழகப் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இனி அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே வருவாய் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கென உயர்நிலைக் கல்விக்குத் தேவையான முக்கியச் சான்றிதழ்களைப் பள்ளிகளிலேயே சிறப்பு முகாம்கள் நடத்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அதிரடி அறிவிப்பின் மூலம் சான்றிதழ்களைப் பெறுவதற்காகப் பெற்றோர்களும் மாணவர்களும் அரசு அலுவலகங்களுக்கு அலைவது முற்றிலும் தவிர்க்கப்படும். மேலும், மாணவர்களுக்கு மிக விரைவாகவும் எளிதாகவும் சான்றிதழ்கள் கிடைக்கப் பெறுவதால் இந்த அறிவிப்பு பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
