டெல்லியில் பதற்றம்…. ஜந்தர் மந்தரில் திடீர் போராட்டம்…. கொத்து கொத்தாக கைதான இளைஞர்கள்…. நள்ளிரவில் உச்சக்கட்ட பரபரப்பு…!

By Nanthini on ஆவணி 22, 2026

Spread the love

டெல்லியின் ஜந்தர் மந்தரில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்தத் திரண்ட பலரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. இந்தப் போராட்டத்திற்கு காவல்துறையிடம் இருந்து முறையான அனுமதி பெறப்படவில்லை என்பதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் பாதுகாப்புப் படையினர் தடுப்புகளை அமைத்து அவர்களைக் கைது செய்தனர்.

சாதிக்கு பதிலாகப் பொருளாதார அடிப்படையிலேயே அரசு உதவிகள் மற்றும் இடஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும் என்பதை முதன்மைக்கோரிக்கையாக வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. “ரிசர்வேஷன் ஹடாவோ அந்தோலன்” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் சமூக வலைத்தளங்கள் வாயிலாக மக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, டெல்லியில் திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டபோதிலும், ராம்லீலா மைதானத்தில் சுமார் 500 பேர் வரை கூடி அமைதியான முறையில் போராட்டம் நடத்தக் காவல்துறையால் அனுமதி சான்றிதழ் (NOC) வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்டதால் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று.

   

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போதைய இடஒதுக்கீடு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், ஏழை எளிய மக்களுக்கு சாதி வேறுபாடின்றி உதவிகள் சென்று சேர ‘கிரீமி லேயர்’ வரம்பைக் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு உரிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்றும் தெரிவித்தனர்.