காலையிலேயே அதிர்ச்சி…. பிரபல இயக்குனர் திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த திரையுலகம்….!

By Nanthini on ஆவணி 26, 2026

Spread the love

பாலிவுட் திரையுலகின் பிரபல இயக்குநரான குக்கு கோலி (77) மும்பையில் மாரடைப்பு காரணமாக காலமான செய்தி திரை உலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 1991-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பூல் அவுர் காண்டே’ திரைப்படத்தின் மூலம் அஜய் தேவ்கானை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இவர், இரண்டு பைக்குகளில் கால்களை ஊன்றியபடி நாயகன் கெத்தாக வரும் வரலாற்று சிறப்புமிக்க காட்சியை முதன்முதலில் படமாக்கி பாலிவுட்டில் புதிய அலை வீசச் செய்தவர்.

‘சுஹாக்’ (Suhaag), ‘ஹகீக்கத்’ (Haqeeqat), ‘சுல்மி’ (Zulmi) எனப் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கித் தனக்கென தனிமுத்திரை பதித்த அவரது மறைவிற்கு அஜய் தேவ்கான் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.