“திரையுலகில் அதிர்ச்சி.. 100 படங்களுக்கு மேல் நடித்த பிரபல நடிகர் சாலை விபத்தில் அகால மரணம்…. சோகத்தில் ரசிகர்கள்”…!!!

By Muthu Mani on வைகாசி 5, 2026

Spread the love

பிரபல மலையாள நடிகர் சந்தோஷ் நாயர் (66) கேரளாவில் நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த செய்தி திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்தனம்திட்டா அருகே காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக லாரி மோதியதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமானார்.

சுமார் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள சந்தோஷ் நாயர், அண்மையில் வெளியான ‘மோகினியாட்டம்’ திரைப்படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மலையாளத் திரையுலகைத் தாண்டி, தமிழில் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ போன்ற புகழ்பெற்ற சீரியல்கள் மூலம் இல்லத்தரசிகள் மத்தியிலும் அவர் மிகவும் பிரபலமானவர். இவரது மறைவுக்குத் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.