துணை சபாநாயகர் பதவிக்கு ஆபத்து?…. ரவிசங்கரை தூக்கத் துணியும் தவெக தலைமை….  CM விஜய் பிளான்….!

By Nanthini on கார்த்திகை 11, 2026

Spread the love

தாக்குதல் விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு சட்டமன்றத் துணை சபாநாயகர் பொறுப்பில் இருந்து துரை ரவிசங்கரை நீக்க ஆளுங்கட்சியான தவெக தலைமை தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. ஒருவேளை அவர் தானாகவே முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்ய மறுக்கும் பட்சத்தில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 179(c) பிரிவைப் பயன்படுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து அவரை நீக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழல் தவெக உட்கட்சி வட்டாரத்திலும், தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், துணை சபாநாயகரை நீக்குவதற்கான இந்தத் தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் தங்கு தடையின்றி நிறைவேற்ற தவெகவிடம் தனிப்பெரும்பான்மை பலம் இல்லை. இதனால், தீர்மானத்திற்கு போதிய ஆதரவைத் திரட்டும் வகையில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயச் சூழலுக்கு ஆளுங்கட்சி தள்ளப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே இந்த அரசமைப்புச் சட்ட நடவடிக்கை சாத்தியமாகும் என்பதால், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து அனைத்து தரப்பினரும் உற்றுநோக்கி வருகின்றனர்.