உஷார் மக்களே… ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா… அப்போ இந்த வேலையை உடனே பண்ணுங்க… வெளியான அதிரடி அறிவிப்பு…!

By Swetha on ஆவணி 26, 2026

Spread the love

ரேஷன் கார்டுகளில் போலிப் பெயர்களைத் தவிர்ப்பதற்காகவும், உணவுப் பொருட்கள் முறைகேடுகளைத் தடுப்பதற்காகவும் தமிழக அரசு சிறப்பு முகாம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி, குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து பயனாளிகளும் தங்களது பயோமெட்ரிக் கைரேகை சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2023 அக்டோபர் முதல் இப்பணி நடைபெற்று வரும் நிலையில், தற்போது 96.21% பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 100% பதிவை முழுமையாக நிறைவு செய்யும் நோக்கில், வரும் 29.08.2026 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும். இதுவரை கைரேகை பதிவு செய்யாத அனைத்து குடும்ப உறுப்பினர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

   

நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் இந்த சிறப்பு முகாமிற்கு நேரில் சென்று தங்களது கை விரல் ரேகையை பதிவு செய்யத் தவறும் பட்சத்தில், ரேஷன் அட்டையில் இருந்து அந்த நபர்களின் பெயர்கள் கட்டாயம் நீக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. எனவே, விடுபட்ட பயனாளிகள் அனைவரும் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள நியாயவிலைக் கடைக்குச் சென்று தங்கள் பதிவை உடனடியாக முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.