என்னது 13 cuts-ஆ..? ‘லியோ’வில் நீக்கம்… விஜய் ரசிகர்களுக்கு வெளியான அதிர்ச்சி செய்தி…  கடைசியில இப்படி பண்ணிட்டீங்களே…?

By Begam on ஐப்பசி 10, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றிப்படங்களை திரையுலகிற்கு கொடுத்தவர். தனது 5-வது படமாக விஜய் நடிப்பில் லியோ படத்தை தற்பொழுது  இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ படம் வரும் அக்டோபர் 19-ந் தேதி வெளியாக உள்ளது.

   

இதன் டிரெய்லர் சமீபத்தில் ரிலீஸாகி தளபதி ரசிகர்களால் கொண்டாடி தீர்க்கப்பட்டது. இந்த ட்ரைலரின் தொடக்கத்தில் ‘ஒரு சீரியல் கில்லர் பற்றிய கதையை சொல்லும் விஜய், ரவுடிகளிடம் இருந்து தப்பிச்செல்ல முயற்சிக்கும் பல காட்சிகள் வருகிறது. ஒரு கட்டத்தில் என் குடும்பத்தை ஏன் தாக்குறீங்க என்று கேட்டு ஆக்ஷனில் இறங்குகிறார். அதனைத் தொடர்ந்து டிரெய்லர் ஆக்ஷன் அதளகமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், கடைசியில் இதுக்குமேல சொல்லனும்னா  லியோ தான் உயிரோட வந்து சொல்லலும் என்று கௌதம்மேனன் பேசுவதுடன்’ டிரெய்லர் முடிவடைகிறது.

   

 

தற்பொழுது லியோ திரைப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மேலும் லியோ திரைப்படம் சென்சார் போர்டு அனுமதிக்காகவும் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் லியோ திரைப்படத்தில் எடுக்கப்பட்ட 13 சிறு சிறு காட்சிகளை சென்சார் போர்டு நீக்கியுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதைக் கேள்விப்பட்ட தளபதி ரசிகர்கள் ‘கடைசியில இப்படி பண்ணிட்டீங்களே?’ என புலம்பி வருகின்றனர்.