தமிழகத்தில் பருவம் தவறிய மழையினால் சேதமடைந்த பயிர்களுக்கு ₹289.63 கோடி நிவாரண நிதி ஒதுக்கி தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்காக மொத்தம் ₹289.63 கோடி நிதியை ஒதுக்கி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 6.55 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் மழையினால் சேதமடைந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிவாரணத் திட்டத்தின் மூலம் சுமார் 2.80 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ள இந்தத் தொகையானது, விவசாயிகளின் வங்கித் கணக்குகளில் நேரடியாக (DBT) வரவு வைக்கப்படும்.
