ஹரியானாவைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி, எட்டு வயது சக பள்ளி மாணவனால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்க்கப்பட்டார். அங்குத் தொடர்ச்சியாகப் பல நாட்கள் தீவிர மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த அந்தச் சிறுமி, தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்தத் தாக்குதலின் காரணமாக அச்சிறுமிக்கு முகத்தில் பலத்த காயங்களும், எலும்பு முறிவுகளும் ஏற்பட்டன. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் உரிய சிகிச்சைக்குப் பிறகே சிறுமியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
https://twitter.com/IndiaToday/status/2117957028744433820/video/1
மருத்துவமனையிலிருந்து திரும்பிய சிறுமியை வரவேற்பதற்காக மொஹாலியின் ஜிராக்பூரில் உள்ள அவரது மாமா வீட்டில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வண்ணமயமான பூக்கள் மற்றும் பலூன்களால் வீட்டை அலங்கரித்து, சிறுமிக்கு மக்கள் உற்சாகமான மற்றும் நெகிழ்ச்சியான வரவேற்பை அளித்தனர்.
