VBGRAM-G திட்டத்தில் 20% கமிஷனா?…. “என் உடலில் சுகர், BP ஏறிப்போச்சு”…. கமிஷன் புகாரால் கதறி அழுத MLA குழந்தை ராணி…!

By Nanthini on கார்த்திகை 5, 2026

Spread the love

தனக்கு எதிராகத் தொடர்ந்து பரப்பப்பட்டு வரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் மிகுந்த மனவேதனையும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் குழந்தை ராணி உருக்கமாகத் தெரிவித்துள்ளார். VBGRAM-G திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தத்தில் அவர் 20 சதவீதம் கமிஷன் கேட்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த குற்றச்சாட்டைக் கடுமையாக மறுத்துள்ள அவர், தான் எப்போதுமே நேர்மையான வழியிலும் தூய்மையான கரங்களோடும் மக்கள் பணியாற்றி வருவதாகத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். வீண் வதந்திகளைப் பரப்பி தனது பெயருக்குக் களங்கம் விளைவிக்க நினைப்பவர்கள், இதுபோன்ற மறைமுகத் தாக்குதல்களை நிறுத்திவிட்டு தைரியம் இருந்தால் நேரடியாக நேருக்கு நேர் மோதிப் பார்க்கட்டும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.

தன் மீதான தொடர் அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் அவதூறுப் பிரச்சாரங்கள் காரணமாகத் தனது உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக எம்.எல்.ஏ கவலை வெளியிட்டுள்ளார். பொய்க் குற்றச்சாட்டுகளால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாகத் தனக்கு ரத்த அழுத்தம் (BP) மற்றும் சர்க்கரை அளவு திடீரென அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த அவர், ஆதாரமில்லாமல் பழிசுமத்துவது மனிதநேயமற்ற செயல் எனக் குறிப்பிட்டார. எந்தவொரு சவாலையும் நேர்மையாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் வேளையில், தரம் குறைந்த அரசியலுக்காகத் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பது மிகவும் வேதனை அளிப்பதாக அவர் புலம்பியுள்ளார்.