அடப்பாவிகளா, “இதுக்கெல்லாம் கொலை பண்ணுவீங்களா”… கார் ஓட்டி வரும்போது ஏற்பட்ட தகராறு… அடுத்து நடந்த பயங்கர அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on ஐப்பசி 22, 2025

Spread the love

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வாகனம் ஓட்டி வந்ததில் ஏற்பட்ட தகராறில் டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளையான்குடி அருகே உள்ள கண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்த 29 வயதான சங்கர் என்பவர் சொந்தமாக ஆட்டோ மற்றும் கார் வைத்த டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகின்றார். இவர் நேற்று இரவு தன்னுடைய காரில் வெளியே சென்று விட்டு தாயமங்கலம் வழியாக சொந்த ஊர் திரும்பிய போது எதிரே வந்த நபர் மீது கார் மோதுவது போல சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து கிராமத்திற்கு திரும்பிய அவரை அது சம்பந்தமாக பேசுவதற்காக தாயமங்கலம் கிராமத்தை சேர்ந்த முத்துவேல் மற்றும் செல்வகுமார் ஆகியோர் தாயமங்கலம் அழைத்துச் சென்றுள்ளனர்.

பேச்சுவார்த்தை நடத்திய போது இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அறிவாளால் ஷங்கரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடனே வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தற்போது குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.