தமிழகத்தில் அந்தியோதயா (AAY) ரேஷன் கார்டுதாரர்கள் தங்களது கார்டுகள் ரத்து செய்யப்படுவதைத் தவிர்க்க, வரும் 31-ம் தேதிக்குள் உடனடியாக இ-கேஒய்சி (eKYC) விரல்ரேகை பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து தகுதியானவர்களுக்கு மட்டுமே பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கில் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
எனவே, இதுவரை கைரேகை பதிவு செய்யாத பயனாளிகள் அனைவரும் தங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு உடனடியாகச் சென்று, தங்களின் பயோமெட்ரிக் விபரங்களைப் புதுப்பித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்; தவறும் பட்சத்தில் ரேஷன் கார்டுகள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நீக்கப்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
