நாடே அதிர்ச்சி…. “6 மாதங்களில் 554 கணவர்கள் மரணம்”…. அதிரவைக்கும் அறிக்கை…. வெளியான பகீர் புள்ளிவிவரம்….!

By Nanthini on ஆடி 18, 2026

Spread the love

இந்தியாவில் குடும்ப வன்முறைகள் மற்றும் திருமணச் சிக்கல்கள் காரணமாக ஆண்கள் எதிர்கொள்ளும் விபரீதங்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. குருகிராம்-ஐ தலைமையிடமாகக் கொண்ட ‘ஏகம் நியாய் ஃபவுண்டேஷன்’ நடத்திய ஆய்வின்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் (ஜனவரி 1 முதல் ஜூலை 14 வரை) மட்டும் நாடு முழுவதும் கணவர்கள் கொல்லப்பட்டது அல்லது தற்கொலை செய்துகொண்டது என மொத்தம் 554 சோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஊடக அறிக்கைகள் மற்றும் உள் பதிவுகள் மூலம் திரட்டப்பட்ட இந்தத் தரவுகள், கணவர்களுக்கு எதிரான வன்முறைகளின் தீவிரத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளன.

இந்த அறிக்கையின்படி, பதிவான 322 கொலை வழக்குகளில் 194 சம்பவங்களுக்கு கள்ளக்காதல் விவகாரங்களே முதன்மை காரணமாக இருந்துள்ளன. மனைவியின் கள்ளக்காதல் உறவைக் கணவர்கள் எதிர்த்தாலோ அல்லது கேள்வி கேட்டாலோ அவர்கள் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக, குடும்ப தகராறுகள் காரணமாக 88 கொலைகள் நடந்துள்ளன. மறுபுறம், பதிவான 232 தற்கொலை வழக்குகளில், 104 சம்பவங்களுக்கு நீண்டகால திருமண வாழ்க்கை சிக்கல்களும், மாமனார்-மாமியார் கொடுமை மற்றும் பொய் குற்றச்சாட்டுகளால் ஏற்பட்ட கடுமையான மன அழுத்தமுமே தற்கொலைகளுக்குத் தூண்டுதலாக இருந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

   

மாநில வாரியான புள்ளிவிவரங்களின்படி, உத்தரப் பிரதேசம் அதிகபட்சமாக 196 கொலை மற்றும் தற்கொலை வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா போன்ற மாநிலங்களிலும் கணிசமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது குறித்துப் பேசிய அமைப்பின் நிறுவனர் தீபிகா நாராயண் பரத்வாஜ், இந்தியாவில் ஆண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளைக் கண்காணிக்க முறையான தேசிய அளவிலான தரவுத்தளம் இல்லாததே மிகப்பெரிய சவாலாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால், தற்போதைய 554 என்ற எண்ணிக்கை ஊடகச் செய்திகளை மட்டுமே சார்ந்துள்ளதால், ஆவணப்படுத்தப்படாத உண்மையான பாதிப்புகள் இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்றும், அரசாங்கம் உடனடியாக இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.