தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் நடிகை ரெஜினா. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அதன் பிறகு ராஜதந்திரம் மற்றும் மாநகரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தினார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரை உலகிலும் பிரபலமான நடிகை தான். கடைசியாக நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் வில்லியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றில் தன்னுடைய திருமணம் குறித்து பேசி இருக்கிறார். அதாவது ,”எப்போது கல்யாணம் செய்யப் போகிறாய்? என்று என்னுடைய அம்மாவே என்னை கேட்க மாட்டார். அப்படி இருக்கும் பொழுது அந்த கேள்வியை யார் கேட்டாலும், என்னுடைய அம்மாவை கேட்க மாட்டாங்க. நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? உங்களுக்கு என்ன? என்று மூஞ்சிக்கு நேராக கேட்டு விடுவேன். அதுமட்டுமல்லாமல் யாருடனும் நான் உறவில் இருந்தால் அவர்களுக்கு தான் கஷ்டம். ஆனால் பிரண்ட்ஷிப்பில் மட்டும் ஈஸியாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.
