வைத்திலிங்கம் திமுகவிற்கு வந்தது ஏன்..? ரகசியத்தை போட்டுடைத்த திருச்சி சிவா..!!

By Soundarya on தை 22, 2026

Spread the love

ஆர். வைத்திலிங்கம் திமுகவில் இணைந்ததற்கான முக்கிய காரணத்தை திருச்சி சிவா கூறியுள்ளார். அதாவது தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமை மற்றும் ஆளுமை மீது கொண்ட நம்பிக்கையினால் அவர் திமுகவில் இணைந்துள்ளார். தற்போதைய அரசின் சிறப்பான செயல்பாடு மற்றும் ஆட்சித்திறன் வைத்திலிங்கத்தை ஈர்த்துள்ளது எனவும் முதலமைச்சரின் செயல்பாடுகளால் கவரப்பட்டு, அவர் திமுகவை நாடி வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் வைத்திலிங்கத்தின் வருகையை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகத் தெரிவித்த திருச்சி சிவா, திமுக – காங்கிரஸ் கூட்டணி மிகவும் இணக்கமாகவும், ஒற்றுமையுடனும் இருப்பதாகவும் கூறினார்.