தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசு பொறுப்பேற்றவுடன், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் மதுக்கடைகளின் வேலை நேரத்தை 2 மணி நேரம் குறைக்க அதிரடி முடிவு எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. “மக்களின் நலனே அரசின் முதன்மை நோக்கம்” என்ற கொள்கையின் அடிப்படையில், மதுப் பழக்கத்தைக் குறைக்கும் முதற்கட்ட முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. அரசின் இந்தச் சீர்திருத்த நடவடிக்கையானது குறிப்பாகப் பெண்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும், மாநிலம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள 717 டாஸ்மாக் கடைகளை ஜூன் முதல் வாரத்திற்குள் நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் 276 கடைகள் வழிபாட்டுத் தலங்கள் அருகிலும், 186 கடைகள் கல்வி நிறுவனங்கள் அருகிலும், 255 கடைகள் பேருந்து நிலையங்கள் அருகிலும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த அதிரடி மாற்றங்கள் சமூகத்தில் மதுவினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதோடு, பொது இடங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
