பரிசுப் பொருட்களுக்குப் பதில் அடகு நகை மீட்பா..? அரசியல் கட்சிகளுக்குப் செக் வைத்த தேர்தல் ஆணையம்..!!

By Soundarya on பங்குனி 18, 2026

Spread the love

இந்தியாவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், நகை அடகுத் தொழில் செய்வோருக்கான முக்கிய வழிகாட்டுதல்களை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) வெளியிட்டுள்ளது. இதன்படி, அடகு வைக்கப்பட்ட நகைகளைத் திரும்பப் பெறுவதற்கான டோக்கன்கள் அல்லது வில்லைகளை வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்கள் வாக்காளர்களுக்கு வழங்கக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடகு வைத்த நகைகளை யாரேனும் சந்தேகத்திற்கு இடமான முறையில் மீட்டெடுப்பது தெரிந்தால், அது குறித்து உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். இதற்காக 1800-425-7012 என்ற பிரத்யேகத் தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்ணையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்கள் அல்லது நகைகள் மூலம் லஞ்சம் கொடுப்பதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.