தமிழ் சினிமாவில் சைடு டான்சராக இருந்தவர் தான் ரெடிங் கிங்ஸ்லி. இவருக்கு டான்ஸராக அங்கீகாரம் கிடைத்ததால் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலங்கினார் அதன் பிறகு பொருட்காட்சியில் நடத்தும் காண்டக்டராக பணிபுரிந்து வந்தார். அதன் மூலம் அவருக்கு நல்ல வருமானமும் கிடைத்து வந்தது. தமிழக அரசு சார்பாக நடத்தப்படும் பொருட்காட்சிகளின் காண்டாக்ட் ஆக மாறி அதன் மூலமாக கோடிக்கணக்கில் வருமானமும் ஈட்டி வந்தார். இவர் ஸ்பெல் போன் டான்ஸ் கம்பெனி மற்றும் ஸ்கூல் என ஆரம்பித்து தன்னுடைய வட்டாரத்தை விரிவாக்கினார்.

பல வருடங்களாக இந்த பிசினஸில் இருந்து வருகிறார். அவருடைய நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தது. டாக்டர் படத்திலும் அவருடைய நகைச்சுவை நடிகராக நடிக்க வைத்தார். மாஸ்டர், ஜெயிலர் படத்திலும் நடித்தார். இதற்கிடையில் தான் கோலமாவு கோகிலா படத்தில் நெல்சன் நடிக்க வைத்தார்.

திருமண பந்தத்தில் உடன்பாடு இல்லாமல் இருந்ததால் 46 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த இவர் சமீபத்தில் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சங்கீதா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்று இருந்தாலும் அவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் கிங்ஸ்லி.

46 வயதில் திருமணம் செய்துகொண்டதால் ஒருசில கேலி கிண்டலுக்கும் ஆளானார். இந்த நிலையில், நடிகர் ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சங்கீதா கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் அவர்களிடமிருந்து வரவில்லை. ஆனால் உண்மை தான் என்று கூறப்படுகிறது.
