ஒரே நாளில் 2 படத்தை ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா..?

By Nanthini on ஐப்பசி 30, 2024

Spread the love

தமிழ் சினிமாவை பொருத்தவரையில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி என்று டாப் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். மற்ற நாட்களில் ரிலீஸ் ஆகும் படங்களை விட தீபாவளி என்ற ரிலீஸ் ஆகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே எதிர்பார்ப்பு அதிகம். சினிமா ரசிகர்கள் தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களுக்காக காத்திருப்பது வழக்கம். இந்த வருடம் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்னும் படப்பிடிப்புகள் நிறைவடையாமல் இருப்பதால் பொங்கலுக்கு திரைப்படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் இந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் 2 முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள்தான் தீபாவளியை குறிவைத்து களமிறங்க உள்ளன.

Amaran Trailer : காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு… ரசிகர்களின் வரவேற்பை  பெறும் அமரன் பட ட்ரெய்லர் – News18 தமிழ்

   

அமரன்:

   

இந்த வருடம் தீபாவளியை குறிவைத்து அமரன் திரைப்படம் களமிறங்க உள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படம் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது.

 

ஜெயம் ரவியின் 'பிரதர்' படத்தின் கதைக்களம் என்ன? - படக்குழு பகிர்வு | plot  of Jayam Ravi s brother film crew shares - hindutamil.in

பிரதர்:

சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தீபாவளி அன்று களமிறங்க உள்ள மற்றொரு திரைப்படம் தான் ஜெயம் ரவியின் பிரதர். இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி கதை களத்துடன் கூடிய படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது.

முன்பதிவில் முந்திய அமரன்! முதல் நாள் வசூலே அள்ளப்போகுது! அப்போ பிரதர் படம்  கதி!

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது. அந்த நிறுவனம் வேட்டையன் வெளியாகும் போது முன்னணி திரையரங்குகளுக்கு அமரன் படத்துடன் ஒப்பந்தம் செய்து விட்டது. இதனால் தீபாவளி படங்களுள் அதிக திரையரங்குகள் அமரன் படத்திற்கு கிடைக்கக்கூடும். எப்போதுமே ரெட் ஜெயன்ட் நிறுவனம் இரண்டு படங்களை ஒரே சமயத்தில் வெளியிடாது. ஆனால் இந்த முறை பிரதர் மற்றும் அமரன் திரைப்படத்தை ஒரே நேரத்தில் வெளியிட உள்ளது.

red giant movies dominate in Tamil cinema industry

அதாவது அமரன் திரைப்படத்தில் வெளியிட்ட உரிமையை ஏற்கனவே ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்று இருந்த நிலையில் பிரதர் திரைப்படத்தின் தமிழக உரிமையை கருணாமூர்த்தி கைப்பற்றி ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலமே வெளியிடுகின்றார். ஆகையால் அந்நிறுவனம் அமரன் மற்றும் பிரதர் ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கும் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்து வருகின்றது. குறிப்பாக பிரதர் திரைப்படத்தில் இடம்பெற்ற மக்கா ரிஷி பாடலுக்காகவே அப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட உள்ளது.