தமிழ் சினிமாவில் நடிகராக முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் சின்னத்திரை விஜய் டிவியில் மிமிக்ரி செய்யும் தொகுத்து வழங்கியும் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் மூலம் அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.
மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன் மக்களை சிரிக்க வைக்கும்படியான கதாபாத்திரங்கள் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தார். அதற்கு அடுத்ததாக கொஞ்சம் கொஞ்சமாக கமர்சியல் படத்துக்கு மாறினார். நடித்துக் கொண்டிருக்கும் போதே சில படங்களை தயாரித்து வெளியிடவும் செய்தார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் இந்திய ராணுவத்தில் பணியாற்றி போரில் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமான அமரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனமும் சோனி பிக்சர்ஸ்சும் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த திரைப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது.
இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. நிச்சயம் இந்த படம் சிவகார்த்திகேயன் கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று பலரும் கூறுகின்றனர். இந்நிலையில் இந்த படம் சம்பந்தமான உத்தரவை உயர்நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. அது என்னவென்றால் சட்டத்துக்கு விரோதமாக அமரன் திரைப்படத்தை இணையத்தில் வெளியிடக்கூடாது மீறி வெளியிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவை பிறப்பித்திருக்கிறது. 1,957 இணையதளங்களில் அமரன் படத்தை சட்டவிரோதமாக வெளியிடக்கூடாது என்று தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது.